Ad Code

Responsive Advertisement

இரட்டை உருமாற்ற கொரோனா வைரஸ்

  1. புதுப்புது வைரஸ்களை அவற்றின் அறிவியல் எண்களை கொண்டு அடையாளப்படுத்துவது கடினமாக இருந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் உலக சுகாதார நிறுவனம் உருமாற்ற வகை வைரஸ்களுக்கு புதுப்புது பெயர்களை சூட்டி உள்ளது. 
  2. அதன்படி, இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய பி.1.617.1 வகை வைரசுக்கு 'கப்பா' என்றும், இரண்டாவதாக கண்டறி யப்பட்ட பி. 1.617.2 வைர சுக்கு 'டெல்டா' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. 
  3. கிரேக்க எழுத்துக்கள் அகர வரிசைப்படி, இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட முதல் உரு மாற்ற கொரோனா வைரசுக்கு (பி. 1.1.7) ஆல்பா ' என்றும், தென் ஆப்ரிக்கா வகைக்கு (பி.1.351) 'பீட்டா' என்றும், பிரேசிலில் வகைக்கு 'காமா' என்றும், பி.2 வகைகளுக்கு 'ஜெடா' என்றும், அமெரிக்கா வகை களுக்கு எப்சிலான்' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. 
  4. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு தலை வர்மரியாவான் கெர்கோவ் தனது டிவிட்டர் பதிவில், 'உருமாறிய கொரோனா வைரசை எளிதாக அடையாளப்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. 
  5. ஆனால், அதன் அறிவியல் பூர்வமான பெயர் மாறவில்லை . பொதுத்தளத்தில் விவாதிக்கவும், அடையாளப்படுத்தவும் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இரட்டை உருமாற்ற கொரோனா வைரஸ்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement